திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை.. மேலும் ஒருவர் கைது

குற்றம்
Updated Oct 06, 2019 | 13:25 IST | Times Now

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய முக்கிய குற்றவாளியான முரளி (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

trichy lalitha jewellery robber
trichy lalitha jewellery robber  |  Photo Credit: Facebook

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2-ஆம் தேதி அதிகாலை நடந்த கொள்ளையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையில் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மணிகண்டன் என்பவர் 4 கிலோ 250 கிராம் நகைகளுடன் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ் உள்பட 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. 

இந்த வழக்கில் சுரேஷின் தாயார் கனகவள்ளியும் கைது செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து மணிகண்டன், கனகவள்ளி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த போலீசார் இருவரையும் திருச்சி அழைத்து வந்த தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர் அவர்களை வருகிற 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையிலும், கனகவள்ளி காந்தி மார்க்கெட் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய முக்கிய குற்றவாளியான முரளி (26) என்பவரை  போலீசார் கைது செய்தனர். இவர் இந்த கொள்ளைக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகனின் அண்ணன் மகன் ஆவார். முரளியிடம் நடத்தப்படும் விசாரணையில் முருகன் குறித்த தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் எதிர்ப்பார்க்கின்றனர். 


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...