மதுரையில் பயங்கரம்.. வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை

குற்றம்
Updated Oct 06, 2019 | 16:29 IST | Mirror Now

மதுரையில் வட மாநில இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youth brutally murdered by gang in Madurai
மாதிரிபடம் 


மதுரை: மதுரையில் வடமாநில இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, பெரியார் பேருந்து நிலையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள படிக்கட்டில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து  தடயங்களை சேகரித்தனர். கொல்லப்பட்டு கிடந்தவரின் அருகில் பட்டா கத்தி ஒன்றும், கஞ்சா பொட்டலமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் என்ன, அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள எஸ்.எஸ்.காலனி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...