விளையாட்டு விபரீதமானது! நிஜ துப்பாகி வைத்து டிக்டாக் வீடியோ, இளைஞர் பலி

குற்றம்
Updated Apr 15, 2019 | 10:31 IST | Twitter

புது டெல்லியில் 19 வயது இளைஞர் ஒருவர் நிஜ துப்பாக்கியில் டிக்டாக் வீடியோ எடுக்கும்போது பரிதாபமாக உயிரழந்தார். 

NewDelhi: 19 year old teen shot dead while taking tiktok video in real gun
நிஜ துப்பாகி வைத்து டிக்டாக் வீடியோ, இளைஞர் பலி  |  Photo Credit: Getty Images

புது டெல்லியில் 19 வயது இளைஞர் ஒருவர் டிக்டாக் வீடியோ எடுக்கும்போது பரிதாபமாக உயிரழந்தார். சனிக்கிழமை இரவு, சல்மான் என்ற இளைஞர் தனது நண்பர்களான சோஹைல் மற்றும் அமீருடன் புது டெல்லியில் இந்தியா கேட்டுக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. 

நண்பர்கள் காரில் இருந்தபடியே டிக்டாக் வீடியோ செய்வதற்காக அந்தத் துப்பாக்கியை வைத்திருந்திருக்கின்றனர். சல்மானைக் குறிவைத்து இருவரும் துப்பாக்கியால் சுடுவதுபோல நடிக்க, துப்பாக்கி தவறுதலாகச் சுட்டுவிட்டது. பதறிப்போன அமீரும், சோஹைலும் காரை எடுத்துக்கொண்டு சோஹைலின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே நடந்த விஷயத்தைக் கூறிவிட்டு ரத்தக்கறை படிந்த சட்டையையும் மாற்றிவிட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சல்மானை அழைத்துச் சென்று இருக்கின்றனர். 

இதுபற்றி மனோரமா ஆன்லைன் வெளியிட்டு இருக்கும் செய்தியில்,  நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, சல்மான் ஏற்கனவே இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் கூறினர். மருத்துவர்கள் காவல்துறையில் புகார் அளித்தபின் காவல்துறை சோஹைலையும் அமீரையும் கைது செய்தது. மேலும் அவர்களுக்கு உடை மாற்ற உதவிய சோஹைலில் உறவினரையும் கைது செய்தது. 

நிஜமாகவே டிக்டாக் செய்யப் போனபோதுதான் விபத்து ஏற்பட்டதா, அல்லது கொலையா என்று போலீஸ் விசாரித்து வருகின்றனர். சல்மானின் உடல் திங்கட்கிழமையான இன்று பிரேதப்பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைட்க்கப்படும். இறந்துபோன சல்மான்தான் வீட்டில் கடைக்குட்டி. இவருக்கு ஒஉர் அண்ணனுன் அக்காவும் இருக்கிறார்கள். 19 வயதான சல்மான் தற்போதுதான் கல்லூரியில் சேர்ந்து படித்துவருகிறார். இந்தக்காரும் சல்மானுடையதுதான். 

டிக்டாக் வீடியோ எடுக்கும்போது சல்மான் உயிரைவிட்ட செய்தி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. என்னதால் வைரலுக்காக ரிஸ்க் எடுத்தால் இப்படி உயிர் போகும் அளவுக்கா ரிஸ்க் எடுப்பது, போன உயிர் திரும்பி வருமா? 

NEXT STORY
விளையாட்டு விபரீதமானது! நிஜ துப்பாகி வைத்து டிக்டாக் வீடியோ, இளைஞர் பலி Description: புது டெல்லியில் 19 வயது இளைஞர் ஒருவர் நிஜ துப்பாக்கியில் டிக்டாக் வீடியோ எடுக்கும்போது பரிதாபமாக உயிரழந்தார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola