ரூ.100 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்;இருவர் கைது!

குற்றம்
Updated Sep 06, 2019 | 16:29 IST | Mirror Now

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் 4.2 கிலோ எடையிலான கொக்கைனை கடத்த முயன்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.

4.2 கிலோ எடையிலான கொக்கைன்பறிமுதல், 4.2 Kg cocaine seized in Delhi
4.2 கிலோ எடையிலான கொக்கைன் பறிமுதல்!   |  Photo Credit: Getty Images

புதுடெல்லி: தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் 4.2 கிலோ எடையிலான கொக்கைனை கடத்த முயன்ற அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.  

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் போதை பொருட்களுடன் டெல்லிக்கு வரவுள்ளதாகவும், அங்கிருந்து பல கும்பல்களுக்கு அதனை விற்கவுள்ளதாகவும் தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் டெல்லி மஹிபல்புர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 4.2 கிலோ எடையிலான கொக்கைனுடன் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். பின்னர் அவரை கைது செய்ததோடு அதிகாரிகள் ரூபாய் 100 கோடி மதிப்பிலான அந்த  கொக்கைனையும் பறிமுதல் செய்துனர். 

பின்னர் விசாரணையில் அவரது பெயர் ரிச்சர்ட் வால்டர் என்றும், எக்குவடோரில் இருந்து கேஎல்எம் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அவர் இது போல பிரேசில், ஹாங் காங், தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளுக்கு போதை பொருளை கடத்தியுள்ளார். சர்வேதச போதைப்பொருள் கும்பலுக்காக வேலை செய்யும் இவர், ஒரு போலியான தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதாக கூறி அனைவரையும் ஏமாற்றி இவ்வாறு பல நாடுகளுக்கு சென்றுள்ளார். இவருடன் இந்த கடத்தலில் சம்மந்தப்பட்டுள்ள நைஜீரியாவை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதில் ஈடுபட்டுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி ஒருவர் இதனை பற்றி கூறுகையில் "தென் அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறது. இங்கு விற்பது மட்டும் இன்றி இங்கிருந்து பல நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் அயல்நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.   

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...