வீடியோ - சத்துணவு பணியாளருடன் ஆசிரியர் தகாத உறவு; அடித்து உதைத்த ஊர்மக்கள்

குற்றம்
Updated Sep 11, 2019 | 18:54 IST | Mirror Now

அங்கன்வாடியில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் ஆசிரியர் சரவணனுக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருவரும் அவ்வப்போது அந்தரங்க செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

Representative Image, பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்  |  Photo Credit: Getty Images

நாமக்கல்: அரசு பள்ளியில் சத்துணவு பணியாளருடன் ஆசிரியர் தகாத உறவில் ஈடுபட்டதை அடுத்து பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். கல்விக்கு பெயர் போன நாமக்கல் மாவட்டத்தில், புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இச்சம்பவம் நடைபெற்றது.

கடந்த 4 ஆண்டுகளாக அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் சரவணன். அருகே உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் சரவணனுக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருவரும் அவ்வப்போது அந்தரங்க செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தாம் ஏற்கனவே அவர்கள் இருவரையும் கண்டித்ததாகக் கூறும் நிலையில், அதற்கும் இவர்கள் கட்டுப்படவில்லை எனத் தெரிகிறது. இனியும் பொறுக்க முடியாத நிலையில் ஊர்மக்களே பள்ளிக்குள் சென்று சரவணனை பிடித்து அடித்து உதைத்தனர். மேலும், காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு சரவணனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் கூறியுள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...