வெயிலில் நிற்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தாய்: பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை

குற்றம்
Updated May 21, 2019 | 14:33 IST | Mirror Now

திருச்சி அருகே 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் தாயரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

mother killed daughter
mother killed daughter  |  Photo Credit: Getty Images

திருச்சி: தாய் கொடுத்த நூதன தண்டனையால் திருச்சி அருகே 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் நித்திய கமலா. இவரது கணவர் பாண்டியன் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தம்பதிக்கு 5 வயதில் லத்திகா ஸ்ரீ என்னும் மகள் உள்ளார். இந்நிலையில் கோடை விடுமுறை என்பவதால் சிறுமி லத்திகா ஸ்ரீ அதிக நேரம் டிவி பார்ப்பதாக கூறி அவரது தாயார் கண்டித்துள்ளார். 

நேற்று காலை லத்திகா ஸ்ரீ டிவி பார்த்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் நித்திய கமலா கோபமடைந்துள்ளார். ஆனால், சிறுமி அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நித்ய கமலா லத்திகா ஸ்ரீயை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரை வீட்டிற்கு வெளியே கடும் வெயிலில் நிற்க வைத்து தண்டனை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் சோர்வடைந்த சிறுமி மயங்கி சுருண்டு விழுந்துள்ளாா். பின்னர் 

உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் காட்டுபுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நித்திய கமலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோடை விடுமுறையில் படிப்பில் கவனம் செலுத்த வற்புறுத்தி தாய் அடித்து வெயிலில் நிறுத்தி மகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

NEXT STORY