திருச்சி லலிதா ஜூவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

குற்றம்
Updated Oct 02, 2019 | 12:53 IST | Times Now

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

Trichy jewellery shop robbed, திருச்சி நகைக்கடையில் கொள்ளை
திருச்சி நகைக்கடையில் கொள்ளை  |  Photo Credit: YouTube

திருச்சி: முகமூடி கொள்ளையர்கள் பிரபல நகைக்கடையின் பின்புற சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இக்கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று காலை வழக்கம் போல நகைக்கடையை திறந்த ஊழியர்கள் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததை கண்டுபிடித்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தரைத்தளத்தில் உள்ள அனைத்து நகைகளையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். சுமார் ரூ.36 கோடி மதிப்புள்ள 100 கிலோ நகைகள் திருடு போயிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. திருடுபோன மொத்த நகைகளின் மதிப்பு கணிக்கடப்பட்டு வருகிறது. காலை 2.11 மணி முதல் 3.15 மணிக்குள்ளாக இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கொள்ளையர்களை மொபைல் போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கும்  பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில் திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இதே பொன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்றது. காஸ் வெல்டிங் மூலமாக இரண்டு துளையிட்டு வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 5 லாக்கர்களில் இருந்து 510 சவரன் நகை, 21 லட்சம் பணம் ஆகியவற்ற கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்கள் காவல்துறையிடம் இன்னும் பிடிபடவில்லை.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...