'கூடா நட்பு கேடாய் முடியும்’ - 3 வயது சிறுமியை அடித்துக் கொன்ற அம்மாவின் ‘ராங்க் கால்’!

குற்றம்
Updated May 27, 2019 | 21:40 IST | Times Now

கோவை மாவட்டம், வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ரூபிணி என்பவருக்கு ராங்க் கால் மூலமாக தமிழ்ச்செல்வன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

tamil nadu, தமிழ்நாடு
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

கோவை: கோயம்புத்தூரில் மூன்று வயது சிறுமியை படுகொலை செய்து முட்புதரில் வீசிய கொடூரனை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவை மாவட்டம், வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ரூபிணி என்பவருக்கு ராங்க் கால் மூலமாக தமிழ்ச்செல்வன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஒருகட்டத்தில் ரூபிணி மற்றும் தமிழ்ச்செல்வனின் பழக்கம் தவறான வழிக்குச் செல்ல ஆரம்பித்தது.

அதனால் ரூபிணிக்கு கணவர் பால்ராஜூடன் பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து குழந்தை தேவிஸ்ரீயுடன் வீட்டை விட்டு வெளியேறினார் ரூபிணி. மேலும், ஒருகட்டத்தில் உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி தமிழ்ச்செல்வனுடனேயே குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளார். ஆனால், தேவிஸ்ரீயை ஏற்றுக்கொள்ள தமிழ்ச்செல்வன் விரும்பவில்லை.

இந்நிலையில் பாட்டி வீட்டில் விட்டுவிடுவதாக தேவிஸ்ரீயை, தமிழ்ச்செல்வன் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மீண்டும் திரும்பிவந்த தமிழ்ச்செல்வனிடம், ரூபிணி குழந்தையை தன்னிடமே கொண்டு வந்து விடுமாறு கேட்க வெளியில் சென்ற தமிழ்ச்செல்வன் திரும்பி வரவேயில்லை.

தொடர்ந்து இருவருமே வீடு திரும்பாததால் கலவரமான ரூபிணி காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், தேவிஸ்ரீயின் உயிரற்ற உடல் கரட்டுமேடு என்னும் சாலையோர முட்புதரில் இருந்து காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளங்கள் இருப்பதால், தமிழ்ச்செல்வன் அவரை கொன்று வீசியிருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வனை பிடிக்க காவல்துறை தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY