அமெரிக்காவில் 10 மாத குழந்தையை தலையில் துப்பாக்கியால் சுட்ட வாலிபர்

குற்றம்
Updated Jun 27, 2019 | 12:54 IST | Times Now

10 மாத குழந்தையை வாலிபர் ஒருவர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man shoots 10 Months old baby
10 மாத குழந்தையை சுட்ட வாலிபர்.  |  Photo Credit: Times Now

கலிபோர்னியா: கலிபோர்னியா நகரில் மார்கோஸ் எசார்டி என்பவர் 10 மாத குழந்தையை துப்பாக்கியால் தலையில் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தையின் தயாரான டிஸிரி மேனக் சென்ற வாரம் குழந்தையோடு பார்ட்டிக்கு சென்றுள்ளார். மார்கோஸ் எசார்டி என்னும் 23 வயதான வாலிபரும் அங்கு இருந்தார். அப்போது அந்த வாலிபர் குழந்தையின் தாயாரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். அவரின் செயல்களை அந்தப் பெண் நிராகரித்த போதும், தொடர்ந்து அவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார்

இதனால் குழந்தையின் தாயார் குழந்தையை கூட்டிக்கொண்டு நண்பர் ஒருவருடன் காரில் புறப்பட்டார். அந்த காரை பின்தொடர்ந்து அந்த வாலிபரும் சென்றுள்ளார். பின்பு சற்று தூரத்தில் அந்த கார் நின்றவுடன், காரின் அருகில் சென்ற அந்த வாலிபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டுள்ளார். 

கார் ஓட்டுனரும் குழந்தையின் தாயாரும் தப்பிய நிலையில், காரில் இருந்த குழந்தையின் தலை கடுமையான  காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தையின் நிலை தற்போது மிகவும் அபாயகர நிலையில் உள்ளது. 

குழந்தையை துப்பாக்கியால் தலையில் சுட்ட அந்த வாலிபர், கவலையின்றி மீண்டும் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.     

NEXT STORY
அமெரிக்காவில் 10 மாத குழந்தையை தலையில் துப்பாக்கியால் சுட்ட வாலிபர் Description: 10 மாத குழந்தையை வாலிபர் ஒருவர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola