படிப்பை முடித்து திருமணம் செய்ய 18 வயது பெண்ணுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

குற்றம்
Updated Sep 06, 2019 | 14:59 IST | Mirror Now

19 வயது காதலை திருமணம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும், தந்தையுடன் வாழ 18 வயது நிரம்பிய பெண்ணை நிர்பந்திக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

Madras High Court, சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்  |  Photo Credit: BCCL

சென்னை: காதலனுக்கு 21 வயதாகும் வரை காத்திருந்து பட்டப் படிப்பு முடித்து பிறகு திருமணம் செய்துகொள்ளுமாறு 18 வயது இளம்பெண்ணுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தனது மகளை இரண்டு பேர் கடத்தியதாக தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுடைய தந்தை, தனது மகள் பட்டப் படிப்பு முடிக்கும் வரை திருமணம் செய்ய அனுமதிக்க முடியாது என்றார். அந்த பெண்ணின் காதலுனுக்கு வெறும் 19 வயதே ஆகிறது.

தனது படிப்பை தொடர விரும்புவதாகக் கூறிய பெண், தனது தந்தையுடன் வாழ விருப்பமில்லை என்றார். நீதிபதி வைத்தியநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 18 வயது நிரம்பிய பெண்ணை மனுதாரரான தந்தையுடன் வாழ நிர்பந்திக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

இருப்பினும், 19 வயது மட்டுமே நிரம்பிய ஆண் ஒருவரை திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காதலனுக்கு 21 வயது ஆகும் வரை காதலி காத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுவரை, கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு இளம்பெண்ணுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது வெவ்வேறாக உள்ளது. ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வயதிற்கு முன்பாகவே திருமணம் நடக்கும் பட்சத்தில், அது குழந்தை திருமணமாக கருதப்படும். குழந்தை திருமணம் சட்டத்திற்கு புறம்பானது என்றபோதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த வழக்கம் இன்றும் இருந்து வருவது வேதனைக்குரியதாகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே திருமண வயது

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஆணாதிக்கத்தின் விளைவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது வெவ்வேறாக இருப்பதாகக் சுட்டிக்காட்டினார். இம்மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நோட்டீஸ் அனுப்பியது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...