கலப்புத்திருமண பிரச்சனை இல்லையாம் கள்ளக்காதல் விவகாரமாம்!

குற்றம்
Updated Apr 14, 2019 | 16:09 IST | ANI

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவரை கைது செய்திருக்கிறது போலீஸ்.

பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட விநோத தண்டனை, கணவர் கைது!
பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட விநோத தண்டனை, கணவர் கைது!  |  Photo Credit: ANI

மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணுக்கு கொடுத்த தண்டனை மிகவும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து முன்னதாக வெளியான செய்தியில் அந்தப் பெண் வேற்று மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் அந்தக் கணவரை தலையில் தூக்கி கிராமத்தைச் சுற்றி வருமாறு கிராம மக்கள் தண்டனை வழங்கியதாகக் கூறப்பட்டது. அது சம்பந்தமான வீடியோவும் ஏ.என்.ஐ வெளியிட்டது. அதில் மிகவும் கொடூரமாக ஊர்மக்கள் அனைவரும் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்துகிறார்கள். தன் கணவரை தூக்க முடியாமல் அந்தப்பெண் அவதிப்படுகிறார். அவர் முடியாமல் நிற்கும்போது மக்கள் மேலும் அடிக்கிறார்கள். இந்த சம்பவத்தையடுத்து போலீஸ் உடனடியாகக்கணவரையும் மேலும் ஒருவரையும் கைது செய்தது. ஆனால் இது பிரச்சினை இல்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய புதிய செய்தியை க்விண்ட் வெளியிட்டிருக்கிறது. அதில் பேசியிருக்கும் காவல்துறை அதிகாரி, அந்தப் பெண்ணுக்கு இருபது வயது என்றும் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கணவனை விட்டுவிட்டு அந்தப் பெண் பத்து நாட்களுக்கு முன்னால் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். அந்தப் பெண்ணை தேடி கண்டுபிடித்த போது அந்த பெண் இன்னொருவருடன் இருந்திருக்கிறா.ர் அதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து அவரது கணவரை தோளில் தூக்கி கிராமத்தைச் சுற்ற வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் 13 பேர் மீது வழக்கு பதிந்து இருக்கிறது காவல்துறை. தற்சமயம் அந்த வீடியோவில் இருப்பவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதால் கணவர் மற்றும் ஒருவரை மட்டும் போலீஸ் கைது செய்திருக்கிறது. கலப்பு திருமணம் செய்து கொண்டதால்தான் கிராமம் இப்படிச் செய்தனர் என்பதை போலீஸ் மறுத்துள்ளது.

NEXT STORY
கலப்புத்திருமண பிரச்சனை இல்லையாம் கள்ளக்காதல் விவகாரமாம்! Description: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவரை கைது செய்திருக்கிறது போலீஸ்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola