மத்திய பிரதேசம்: முத்தம் தர மறுத்த மாணவியைக் கொன்ற ‘தோழன்’

குற்றம்
Updated Sep 09, 2019 | 17:02 IST | Mirror Now

கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் பள்ளிக்கு அருகே இருக்கும் வயல்வெளியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

Jabalpur girl killed for refusing kiss, முத்தம் கொடுக்க மறுத்த ஜபல்புர் மாணவி கொலை
முத்தம் கொடுக்க மறுத்த ஜபல்புர் மாணவி கொலை  |  Photo Credit: Representative Image

ஜபல்புர்: பள்ளியில் தனது நெருங்கிய நண்பன் முத்தம் கேட்டதற்கு தர மறுத்ததால் மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்புர் மாவட்டம் பிஜாபுரீ கிராமத்தில் இந்த பரிதாபமிக்க சம்பவம் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் பள்ளிக்கு அருகே இருக்கும் வயல்வெளியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவியுடைய தலையின் பின்புறத்தில் காயமும் தென்பட்டுள்ளது. போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளி 19 வயதாகும் ராமன் சிங் சய்யம் என்று கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில் சனிக்கிழமை ராமன் சிங் கைது செய்யப்பட்டார். 

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாணவிக்குத் தான் நெருங்கிய நண்பன் என்று தெரிவித்த ராமன் பள்ளி முடிந்த பிறகு அவருடன் வனப்பகுதிக்கு சென்றதாகக் கூறினார். வாய்க்கால் அருகே அமர்ந்திருந்த சமயத்தில் ராமன் சிங் மாணவிக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, மாணவி ராமன் சிங்கை திள்ளிவிட்டிருக்கிறார். ராமன் சிங் மாணவியை பதிலுக்கு தள்ளிவிட பாறை மீது மோதி மாணவி சுயநினைவை இழந்துள்ளார். சுயநினைவு இழந்த மாணவியைக் கண்டு அஞ்சிய ராமன் சிங், இலைகளால் மாணவியின் உடலை மறைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றத்தின் பெயரில் ராமன் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமன் சிங்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமன் சிங்கிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை நடந்தபோது தாம் உடன் இருந்ததாக விசாரணையின் போது ராமன் தெரிவித்துள்ளார்.

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...