பொள்ளாச்சி: மது விருந்தில் ரகளை.. கேரள மாணவர்கள் 150 பேர் கைது

குற்றம்
Updated May 04, 2019 | 13:54 IST | Times Now

பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த 150 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி, கேரள மாணவர்கள், ரிசார்ட், மது விருந்து, சேத்துமடை, Pollachi, kerala students, Resort, kovai
ரகளையில் ஈடுபட்ட 150 மாணவர்கள் கைது   |  Photo Credit: YouTube

கோவை: பொள்ளாச்சி அருகே சேத்துமடை பகுதியில் அனுமதியின்றி நடத்தி வந்த ரிசார்ட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.  ரகளையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த 150 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை, பொள்ளாச்சி அருகே சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் மது அருந்திய மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதாக அப்பகுதி பொது மக்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை அடுத்து கோவை எஸ்பி சுஜித்குமார் தலைமையிலான போலீசாா் அந்த ரிசாா்ட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவையில் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கஞ்சா, மது, போதை மாத்திரை சாப்பிட்டு நேற்று இரவு முழுவதும் நடனமாடி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட 150 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த தோட்டத்தின் உரிமையாளர் கணேஷ் உள்பட 6 ஊழியர்களும் கைதாகியுள்ளனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவை அடுத்து அந்த ரிசார்ட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...