கேரளா: சமூக வலைதளம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞர்!

குற்றம்
Updated Jun 02, 2019 | 12:07 IST | Mirror Now

25 வயதேயான இளைஞர் 50க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைத்தளம் மூலம் இப்படி ஏமாற்றி இருப்பது கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Kerala: Man sexually exploits over 50 women on social media
Kerala: Man sexually exploits over 50 women on social media  |  Photo Credit: Getty Images

கேரளாவில் 25 வயதேயான இளைஞர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைத்தளம் மூலம் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் திருமணமான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் கைது செய்த போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் என்பது தெரியவந்தது. சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சில பெண்களின் நடவடிக்கையை கவனித்த பின் அவர்களிடம் நயமாகப் பேசி எப்படியாவது மொபைல் நம்பரை பெற்றுவிடுகிறார். அந்த பெண்ணின் மூலம் அவர்களது குடும்ப பின்னணியை அறிந்து கொண்டு போலியான பெண்கள் ஐடியை ஃபேஸ்புக்கில் உருவாக்கி அவர்களது கணவன்மார்களுக்கு வலை வீசுகிறார்.

 அவரது கணவன்மார்கள் பெண் ஐடியில் பேசிய ஆபாட சாட்டை அப்படியே இந்த பெண்களிடம் காமித்து உங்களது கணவன்மார்கள் உங்களுக்கு உண்மையாக இல்லை என்று அவர்களை நம்ப வைக்கிறார். பின் அவர்களது கணவன்மார்களிடம் மனைவிகள் வெறுப்பாக உள்ளனர் என்பதை உறுதி செய்துகொண்டு நயமாகப் பேசி வீடியோ கால் செய்து அவர்களிடம் பேசியுள்ளார். பின் தன்னுடன் உல்லாசமாக இல்லை என்றால் இந்த படங்களை எல்லாம் சமூக வலைதளங்களிலும் கணவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

பயம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவரும் காவல் துறையினரை அணுகவில்லை. ஆனால் ஒரு பெண் மட்டும் தைரியமாக அணுகி புகார் அளித்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்தபோதுதான் இவ்வளவு விஷயங்களும் தெரியவந்துள்ளது. பிரதீஷ்குமாரி லேப்டாப் மற்றும் போனில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் கிடைத்திருக்கிறது.  25 வயதேயான இளைஞர் 50க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைத்தளம் மூலம் இப்படி ஏமாற்றி இருப்பது கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

NEXT STORY