திருமணம் செய்துகொள்ளக் கேட்டதால் கொடூரம், காதலியைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்தக் காதலன்!

குற்றம்
Updated Apr 15, 2019 | 12:06 IST | Times Now

கொலை நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் சூட்கேஸைக் கைப்பற்றிய போலீஸார், அழுகிய நிலையில் பெண்ணின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.

பெண் கொலை
பெண் கொலை  |  Photo Credit: Getty Images

ஹைதராபாத்தில்  25 வயது பெண் இஞ்சினியர் ஒரு வாரமாகக் காணமல் போயிருந்த நிலையில், சூட்கேஸில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார்.  விசாரித்ததில் அவரது காதலனே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து தெரிவித்த போலீஸார், சுனில் என்ற இளைஞரும் கொலை செய்யப்பட்ட பெண்ணும் 2017-ஆம் ஆண்டு முதல் கல்லூரியில் படித்ததில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் அவரது வீட்டிற்கும் தெரிந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அந்தப்பெண் நேர்முகத் தேர்வில் பங்குபெறுவதற்காக மஸ்கட்டுக்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்திருக்கிறார். கூடவே சுனிலும் சென்றிருக்கிறார். ஏப்ரல் 7-ஆம் தேதி வீடு திரும்பிருக்க வேண்டியவர்கள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை ஏற்ற போலீஸார், அந்த பெண்ணின் ஃபோன் ரெக்கார்ட்டை வைத்தும் பெற்றோர்கள் சுனிலுடன்தான் சென்றாள் என்றுக் கூறியதன் பெயரிலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. சுனில் அந்தப்பெண்ணை விமான நிலையத்தில் இருந்து ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவரைக் கொன்றிருக்கிறார். பின் உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து, பேருந்தில் பயணம் செய்து மெட்சல் மாவட்டத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் சூட்கேஸை போட்டுவிட்டு வந்திருக்கிறார்.

கொலை நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் சூட்கேஸைக் கைப்பற்றிய போலீஸார், அழுகிய நிலையில் பெண்ணின் உடலைக் கண்டெடுத்துள்ளனர். சுனில், அந்தப்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் கொலை செய்ததாகக் கூறியிருக்கிறார். அவர்மீது வழக்கு பதிந்து ஹைதராபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

NEXT STORY
திருமணம் செய்துகொள்ளக் கேட்டதால் கொடூரம், காதலியைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்தக் காதலன்! Description: கொலை நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் சூட்கேஸைக் கைப்பற்றிய போலீஸார், அழுகிய நிலையில் பெண்ணின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola