80 வயது மாமியாரை அடிக்கும் மருமகள் - நெஞ்சைப் பதைபதைக்கும் வீடியோ

குற்றம்
Updated Jun 08, 2019 | 19:17 IST | Mirror Now

இந்த வீடியோவை பக்கத்து வீட்டில் இருந்த பெண் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட ஹரியானா முதலைமைச்சர் இதனைப் பார்த்து இதுபோன்ற சம்பவங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Haryana 80-yr-old mother-in-law was brutally attacked by her daughter in law
Haryana 80-yr-old mother-in-law was brutally attacked by her daughter in law  |  Photo Credit: ANI

ஹரியானாவில் 80 வயது மூதாட்டி அவரது மருமகளால்  கடுமையாகத் தாக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கோர சம்பவம் மகேந்திரகர்க் மாவட்டத்தில் நிவாஸ் நகர் என்னும் கிராமத்தில் நடைபெற்று இருக்கிறது. சம்பவத்தன்று கந்தா தேவி தனது மாமியாரும் 80 வயது மூதாட்டியுமான சந்த் பாயை கடுமையாகத் தாக்கியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியிட்டுள்ள செய்தியில் நார்நௌல் டிஎஸ்பி வினோத்குமார் தேரிவிக்கையில் அந்த மூதாட்டி பென்ஷன் பணமாக வந்த 30,000 ரூபாயை தன்வசம் வைத்திருக்கிறார். அதனைப் பெறுவதற்காக கந்தா தேவி சந்த் பாயை கடுமையாகத் தாக்கி கொடுமை படுத்தியுள்ளார், நாங்கள் சென்றபோது சந்த் பாயிடம் விசாரித்ததில் அவரை கந்தா தேவி தாக்கியது தெரிந்தது. மேலும் கந்தா தேவியின் குழந்தையும் தனது பாட்டியை அம்மா அடித்தது உண்மைதான் என்று கூறியிருக்கிறது. இதனால் ஐபிசி 323, 506 ஆகிய செக்‌ஷன்களில் வழக்குப் பதிந்து கந்தா தேவியை கைது செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார். 

இந்த வீடியோவை பக்கத்து வீட்டில் இருந்த பெண் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட ஹரியானா முதலைமைச்சர் இதனைப் பார்த்து இதுபோன்ற சம்பவங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது அந்த மூதாட்டியை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். 

NEXT STORY