2 வயது பேத்தியை 6-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற பாட்டி !

குற்றம்
Updated Oct 01, 2019 | 18:54 IST | Times Now

குழந்தையை பிடிக்காததால் பாட்டி 6-வது மாடியில் இருந்து குழந்தையை விசிறி அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையை மாடியில் இருந்து விசிறி அடித்த பாட்டி, Grandmother flings 2-year-old kid to death from sixth floor
குழந்தையை மாடியில் இருந்து விசிறி அடித்த பாட்டி  |  Photo Credit: Thinkstock

மும்பை: 2 வயது பேத்தியை 6-வது மாடியில் இருந்து பாட்டி கீழே தூக்கி வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

மும்பை மலட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2-வயது குழந்தை மாடியில் இருந்து விழுந்து, தரை முழுவதும் ரத்தத்துடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. ஜியா அன்சாரி என்ற அந்த 2- வயது பெண் குழந்தையை அந்த நிலையில் கண்ட அப்பகுதியினர் அங்கு வசித்த அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மலட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

முதலில் குடும்பத்தில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை ஜன்னல் வழியாக தவறி  விழுந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது ஜன்னல் உள்வழியாக பூட்டியிருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் வீட்டில் உள்ளவர்கள் யாராவது தான் குழந்தையை தூக்கி வீசியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் 2 நாள் விசாரணைக்கு பிறகு குழந்தையின் பாட்டி ருக்சானா அன்சாரி (50) வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது குழந்தையை 6-வது மாடியில் உள்ள தங்களது வீட்டின் ஜன்னல் வழியாக தூக்கி போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் குழந்தையை பிடிக்காததால் இவ்வாறு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தையை கொலை செய்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன் அவர் குழந்தையின் பெற்றோர்களுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு சென்று மற்றொரு மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் மீண்டும் குழந்தையின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய நாளன்று இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.                  
 

NEXT STORY