பொள்ளாச்சி: 10 மாதப் பேத்தியைக் கல்லால் அடித்துக் கொன்ற தாத்தா

குற்றம்
Updated Jul 30, 2019 | 21:15 IST | Times Now

எவ்வளவு கோவம் இருந்தாலும் பச்சிளம் குழந்தையை அதுவும் தனது சொந்த பேத்தையைக் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பொள்ளாசிப் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கொலை செய்த செல்வராஜ்
கொலை செய்த செல்வராஜ்  |  Photo Credit: Twitter

பொள்ளாச்சி அருகே மகன் - மருமகள் மீதுள்ள கோபத்தில் 10 மாதப் பேத்தியை தாத்தாவே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. 

பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது முதல் மனைவி இவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்துசென்று விட்டார். இவர் 2வதாக சக்தி கனி என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது மகன் குமார் மற்றும் அவரது மனைவி முத்துமாலை ஆகியோருடன் ஒன்றாக இருந்துள்ளார். குமாருக்கு 10 மாதத்தில் தர்ஷினி என்ற குழந்தை இருக்கிறார். 

இந்நிலையில் சக்தி கனிக்கும் செல்வராஜுக்கும் தகராறு ஏற்பட்டு அவர் சிலதினங்களுக்கு முன்பு பிரிந்து சென்று இருக்கிறார். இதற்கு தனது மகனும் மருமகனும்தான் காரணம் என்று நினைத்து அவர்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் செல்வராஜ். சம்பவம் நடந்த அன்று, முத்துமாலை வீட்டில் இருக்கும்போது, தர்ஷினியை பைக்கில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் உறவினர்கள் கிணத்துக்கடவு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். செல்வராஜின் செல்போன் நம்பரை வைத்து அவர் அருகில் இருக்கும் ரயில்நிலையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே விரைந்த போலீசார் செல்வராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது ஒத்தக்கால் மண்டபம் - தெப்பம்பாளையம் ஜங்ஷனுக்கு அருகில் குழந்தையை செங்கல்லால் அடித்து கொலை செய்து ஒத்தக்கால் மண்டபம் அருகில் உள்ள பேக்கரி பின்னாடி உடலை வீசியதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் செல்வராஜ். போலீசார் அவர் சொன்ன இடத்துக்குச் சென்று அங்கே கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர். தனது மனைவியின் பிரிவுக்கு மகனும் மருமகளும்தான் காரணம் என நினைத்து பேத்தியைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. எவ்வளவு கோவம் இருந்தாலும் பச்சிளம் குழந்தையை அதுவும் தனது சொந்த பேத்தையைக் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 

NEXT STORY
பொள்ளாச்சி: 10 மாதப் பேத்தியைக் கல்லால் அடித்துக் கொன்ற தாத்தா Description: எவ்வளவு கோவம் இருந்தாலும் பச்சிளம் குழந்தையை அதுவும் தனது சொந்த பேத்தையைக் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பொள்ளாசிப் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...