கோவை முத்தூட் நிறுவனத்தில் 812 பவுன் நகை கொள்ளை; கொள்ளையடித்த மர்ம மனிதர் யார்?!

குற்றம்
Updated Apr 28, 2019 | 12:48 IST | Times Now

கோவை-திருச்சி சாலையில், ராமநாதபுரம் முத்தூட் மினி நகை அடகு நிறுவனம் 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

Kovai news, கோயம்புத்தூர் செய்திகள்
மாதிரிப்படம் 

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அடகு நிறுவனமான முத்தூட் மினியில் 812 சவரன் நகைகள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை-திருச்சி சாலையில், ராமநாதபுரம் முத்தூட் மினி நகை அடகு நிறுவனம் 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்கள் இங்கு தங்களது தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ரேணுகா, திவ்யா ஆகிய இரண்டு பெண் ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்துள்ளனர். 

அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த ஒரு முகமூடி அணிந்த மர்ம நபர் அவர்களை தாக்கி, அங்கிருந்த லாக்கரில் இருந்து கிட்டதட்ட 812 பவுன் தங்க நகைகளையும், 1 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவை அனைத்தும் அடகு பிடிக்கப்பட்ட நகையாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த இரண்டு பெண்களும் தங்கள் நிர்வாகியிடம் உடனடியாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்நிறுவனம், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. 

இதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கொள்ளையடித்த நபரை அடையாளம் கண்டுள்ளனராம் போலீசார். மேலும், அவர் வெளியாளாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், தாக்கப்பட்ட இரண்டு பெண் ஊழியர்களிடமும் காவல்துறையின் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இக்கொள்ளைச்சம்பவம் குறித்த தகவல் இன்று காலை பரவத் துவங்கிய நிலையில் அடகு வைத்த மக்கள் முத்தூட் நிறுவனம் முன்பு குவியத் துவங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...