திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் வெட்டிக்கொலை: நெல்லையில் பரபரப்பு

குற்றம்
Updated Jul 23, 2019 | 19:28 IST | Mirror Now

திமுகவைச் சேர்ந்த நெல்லை மாநகராட்சியின் மேயர் உமா மகேஷ்வரி உட்பட 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை
திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை   |  Photo Credit: Getty Images

நெல்லை: திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்பட 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி மேயராக பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி. நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையும் கொண்டவர். திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட மகளிர் அணியிலும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு பணிப்பெண் ஆகியோர் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்குள் இன்று மதியம் புகுந்த நபர்கள் மூவரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்த நபர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் ரீதியான காரணமா? அல்லது சொத்து பிரச்சனையா ? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...