பிறந்தநாள் கேக்கில் விஷம்; தந்தை மகன் உயிரிழப்பு

குற்றம்
Updated Sep 06, 2019 | 12:14 IST | Mirror Now

ரவியின் உறவினர் ஸ்ரீநிவாஸ் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Father, son die in Telangana after consuming poisoned cake, விஷம் வைத்த கேக் சாப்பிட்ட தந்தை மகன் பலி
விஷம் வைத்த கேக் சாப்பிட்ட தந்தை மகன் பலி  |  Photo Credit: Getty Images

ஹைதராபாத்: தெலுங்கானாவில் விஷம் வைத்த கேக் சாப்பிட்ட தந்தை மகன் உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம் ஐனாபூர் கிராமத்தில் ரவி மற்றும் அவரது மகன் ஆகியோர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். ரவியின் உறவினர் ஸ்ரீநிவாஸ் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சொத்து தகராறு காரணமாக பிறந்தநாள் கேக்கில் ஸ்ரீநிவாஸ் விஷம் வைத்து பழிதீர்த்ததாக குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவியின் மகன் பிறந்தநாளுக்கு ஸ்ரீநிவாஸ் கேக் ஒன்றை அனுப்பியுள்ளார். கேக் சாப்பிட்டு முடித்ததும் குடும்பத்தினர் அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டது. அக்குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை அக்கம்பக்கத்தினர் இணைந்து அருகில் இருந்த மருத்துவமையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து, ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திபெட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ரவி மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ரகு கூறும்போது, “கேக்கில் பூச்சிக்கொல்லி மருந்தின் வாடை வீசியது. பாதிக்கப்பட்டவர்கள் மீதும் அதே வாடை வீசியதாக கிராம மக்கள் கூறினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது,” என்றார்.

கேக்கில் இருந்தது என்ன மாதிரியான விஷம் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகும் விசாரணைக்கு பிறகே முழு தகவல் தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

முன்னதாக, ஜூன் மாதம் இதே தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் பகுதியில் பிரியாணியில் விஷம் வைத்து உண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டனர். அச்சம்பவத்தில், தற்கொலைக்கான காரணம் இதுவரை புலப்படவில்லை.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...