தந்தை, மகன் உயிரை பறித்த வாட்ஸ் அப் சாட்டிங் ! மனைவியால் நடந்த விபரீதம்

குற்றம்
Updated Jun 07, 2019 | 18:36 IST | Mirror Now

வாட்ஸ்அப்பில் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்த மனைவியால் மனவிரக்தி அடைந்த கணவர் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

Father and son Commits Suicide
Representative Image  |  Photo Credit: Getty Images

கோவை: மனைவியின் வாட்ஸ்அப் சாட்டிங்கால் மனவிரக்தி அடைந்த கணவர் தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி அலமேலு. இவர்களது 14 வயது மகன் யோகேஷ் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அலமேலு வீட்டில் இருக்கும் போது நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார் அலமேலு. அப்போது, வீட்டில் உள்ள அறையில் கணவர் அர்ஜூனன், மகன் யோகேஷ் ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததைத் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், வீட்டில் இருந்து அர்ஜுனன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில்,  அலமேலுவுக்கு, வாட்ஸ்அப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும், அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங் செய்து கொண்டு இருந்ததை பார்த்து அர்ஜுனன் கண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அலமேலு கணவாின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் விரக்தி அடைந்த அர்ஜூனன் மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

NEXT STORY