ஈரோடு அதிர்ச்சி: மனைவியைக் கொன்று தலையுடன் பைக்கில் சென்ற கணவன்!

குற்றம்
Updated Apr 17, 2019 | 13:00 IST | Mirror Now

விசாரணையில் மனைவி வேறொருவருடன் இருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஈரோடு கொலை
ஈரோடு கொலை  |  Photo Credit: Getty Images

ஈரோடு அருகே மனைவியின் கழுத்து தனியாகவும் உடல் தனியாகவும் பைக்கில் கொண்டுசென்ற கணவனை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மனைவி வேறொருவருடன் இருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் வசித்து வருபவர் முனியப்பன். லோடு மேனாக வேலை செய்துவரும் இவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. 28 வயதான முனியப்பனும் 19 வயதான நிவேதாவும் கர்நாடகாவில் ஷிமோகா நகரைச் சேர்ந்தவர்கள். மனைவி நிவேதா ஒரு தனியார் மளிகை ஸ்டோரில் வேலைபார்த்து வருகிறார். மனைவி எப்போதும் போன் நோண்டிக்கொண்டே இருப்பதாகக் கூறி முனியப்பனுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.  

செவ்வாய்க்கிழமையான நேற்று அதிகாலை எருக் காட்டுவலசு பகுதியில் ரத்தகறையுடன் பைக்கில் சென்றபோது ஒரு வீட்டின் செவிற்றில் மோதி முனியப்பன் கீழே விழுந்துள்ளார். அப்போது வண்டியில் இருந்து பெண்ணின் தலை தனியாகக் கீழே விழுந்திறக்கிறது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், முனியப்பனை பிடித்துவைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் முனியப்பனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. நேற்று முன் தினம் இரவு வேலைக்கு சென்ற முனியப்பன் நிவேதாமீது சந்தேகம் ஏற்பட்டு திடீரென்று வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் நிவேதா வேறொரு வாலிபருடன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியான முனியப்பன் நிவேதாவிடம் சண்டை போட்டுள்ளார். அவரை கர்நாடகாவில் உள்ள தாய்வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி இரவோடு இரவாக பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். 

வழியில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட பெருந்துறை-பவானி தேசிய நெடுஞ்சாலியில் பைக்கை விட்டு  இறங்கிய முனியப்பன் தன்னோடு வைத்திருந்த கத்தியை வைத்து நிவேதாவின் கழுத்தை அறுத்துள்ளார். தலையை பையில் போட்டுக்கொண்டு, விடிவதற்குள் ஏங்கேயாவது வாய்க்காலில் உடலை வீசிவிடலாம் என்று உடலையும் தலையையும் பைக்கின் பெட்ரோல் டேங்கில் வைத்துக்கொண்டு வரும்போதுதான் இருட்டில் வளைவு தெரியாமல் விழுந்து பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். 

தற்போது முனியப்பனுக்கும் சில இடங்களில் காயம் ஏற்ப்பட்டுள்ளதால், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். நிவேதாவின் உடல் ஈரோடு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக இருக்கிறது. 

NEXT STORY
ஈரோடு அதிர்ச்சி: மனைவியைக் கொன்று தலையுடன் பைக்கில் சென்ற கணவன்! Description: விசாரணையில் மனைவி வேறொருவருடன் இருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola