குடி போதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதியதில் 7 பேர் படுகாயம் -அதிர்ச்சி வீடியோ!

குற்றம்
Updated Aug 19, 2019 | 11:23 IST | Times Now

பெங்களூரில் ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் காரை நடைபாதையில் இருந்தவர்கள் மீது மோதியதால் 7 பேர் காயமடைந்தனர்.

drunk Driver rams car over pedestrians, நடைபாதையில் சென்றவர்கள் மீது மோதிய கார்
நடைபாதையில் சென்றவர்கள் மீது மோதிய கார்  |  Photo Credit: Twitter

பெங்களூரு: பெங்களூரில் ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் காரை நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதால் 7 பேர் படுகாயமடைந்தனர். 

பெங்களூர் எச்.எஸ்.ஆர் லேயவுடில் பிரபல உணவகத்தின் முன் உள்ள நடைபாதையில் பலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் ஒன்று அதீத வேகத்தில் வந்து அங்கு இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியபடி, நடைபாதையில் மீது ஏறியது. அப்போது அங்கு இருந்தவர்கள் மீது கார் மோதியதால் 7 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் காயமடைந்தவர்களில் கௌதம், ஷங்கர் என்ற இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தின் வீடியோ அங்கு இருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது.     

 

 

இந்த விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் ராஜேந்திரா (43) என்பவரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிரபல தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரா, வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற போது மது அருந்தி விட்டு வண்டி ஓடியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. போலீசார் ஓட்டுநர் ராஜேந்திரா மீது குடிபோதையில் வண்டி ஒட்டியதற்காகவும், அதீத வேகத்தில் அஜாக்கிரதையாக வண்டி ஒட்டியதற்காகவும்  சட்டப்பிரிவு 185 மற்றும் 279 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர விபத்தால் அங்கு இருந்த வாகனங்களும், ஹோட்டலின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

          

   


  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...