6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை:சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

குற்றம்
Updated Sep 19, 2019 | 19:52 IST | Times Now

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி முகமது முஸ்தக்குக்கு கட்டாக் சிறப்பு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை,Cuttack court sentences 26-year-old man to death for raping and murdering a six-year-old girl
6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை  |  Photo Credit: BCCL

கட்டாக்: ஒடிசாவில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், குற்றவாளி முகமது முஸ்தக் என்பவருக்கு கட்டாக் சிறப்பு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகன்னாத்பூர் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை முகமது முஸ்தக் (26) என்பவர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கல்லால் தலையில் பலமாக அடித்து காயப்படுத்தியுள்ளார். உடம்பில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் அந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் 21-தேதி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டாள். 

அதனை தொடர்ந்து எஸ்.சி.பி மருத்துவனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலன் இன்றி அச்சிறுமி உயிரிழந்தார். பின்பு விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற முகமது முஸ்தக் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வந்தனா கவுர் போக்சோ சட்ட பிரிவு 6, இ.பி.கோ பிரிவு 302 என பல்வேறு பிரிவுகளின் கீழ் முகமது முஸ்தக்கை குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

ஒடிசாவில் கடந்த 2 மாதங்களில் போக்சோ நீதிமன்றங்கள் 4 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 10-தேதி இதே போல் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   


 

NEXT STORY