மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தற்போது வரை நடந்தது என்ன?!

குற்றம்
Updated Jul 30, 2019 | 20:18 IST | Times Now

நெல்லை திமுக மேயர் உமா மகேஸ்வரி கொலைவழக்கை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த வழக்கில் இதுவரை இந்த வழக்கில் நடந்தது என்ன?

கொலையான உமா மகேஸ்வரி
கொலையான உமா மகேஸ்வரி  |  Photo Credit: Twitter

நெல்லையின் முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கின் குற்றவாலியாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் முன் விரோதம் காரணமாக அவர்தான் மூன்று கொலைகளையும் செய்ததாக ஒப்புக்கொண்டார். பரபரப்பான இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த வழக்கில் நடந்தது என்ன?

கடந்த 23ஆம் தேதி நெல்லையின் முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர் வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் கொடூரமான நிலையில் வீட்டில் கொலை செய்யப்பட்டனர். கொலையாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துப் போலீசார் விசாரித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு செல்போன் மதுரைக்கு பேசியதும், சம்பவம் நடைபெற்ற நாளில் உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு அருகில் சுற்றிய கார் மதுரைக்கும் சென்றதையும் வைத்து போலீசார் விசாரணையை மதுரைப் பக்கம் திருப்பினர். அங்கே திமுக பிரமுகர் சீனியம்மாளுக்கும் உமா மகேஸ்வரிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்ததை அடுத்து சந்தேகம் வலுத்தது. ஆனால் சீனியம்மாள் இந்த குற்றச்சாட்டை மறுத்துவிட்டார். பிறகு உமா மகேஸ்வரியின் வீட்டைச் சுற்றியுள்ள கேமராவில் அவரின் மகன் கார்த்திகேயன் பதிவானதை அடுத்து அவரைக் கைது செய்து போலீஸ் விசாரித்ததில் கொலை செய்ததாக உண்மையை ஒப்புக் கொண்டார் கார்த்திகேயன்.

 விசாரணையில் தான் எப்படி கொலை செய்தேன் என்பதை விளக்கமாகக் கூறியுள்ளார். ஜூலை 23ஆம் தேதி அன்று மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவஞ்சலி என்பதால் போலீசாரின் கவனம் அங்கே இருக்கும் என்று அந்த நாளைத் தேர்ந்தெடுத்துள்ளார் கார்த்திகேயன். பின் உமா மகேஸ்வரி வீட்டுக்கு அருகில் காரில் சுற்றுவந்து, சரியான நேரம் பார்த்து உள்ளே சென்றவர் சாதரணமாகப் பேசி உள்ளார். பின் தன்னுடைய அம்மாவின் அரசியல் வாழ்க்கை உங்களால்தான் அஸ்தமனம் ஆனது என்று கூறியுள்ளார். உடனே உமா மகேஸ்வரி வெளியே செல்லுமாறு கூறியதும் கையில் இருந்த கத்தியை எடுத்து அவரை குத்தியுள்ளார். குறுக்கே வந்த அவரது கணவரையும் குத்திக் கொன்றுள்ளார். பின் இதனைப் பார்த்துக் கூச்சலிட்ட பணிப்பெண்ணையும் குத்திக் கொன்றுள்ளார்.

போலீசாரை திசை திருப்ப, உமா மகேஸ்வரி அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த நகைகள் மொத்தமாக 25 சவரனை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். பின் சீவலப்பேரியில் ரத்தம் படித்த தனது சட்டையை எரித்துவிட்டு அங்கே சாலை ஓரத்தில் நகைகளைப் பதுக்கிவைத்து விட்டுச் சென்றிருக்கிறார். இவையெல்லாம் விசாரணையில் கார்த்திகேயன் கூறியவை. ஆனால் இவற்றையெல்லாம் அவர் ஒருவரே செய்ததாகக் கூறியதுதான் இப்போது புரியாத புதிராக உள்ளது. ஏனென்றால் உமா மகேஸ்வரி வீட்டில் மூன்று கைரேகைகள் கிடைத்துள்ளன. இவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதற்காக கார்த்திகேயன் மறைக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது அம்மா சீனியம்மாள் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொலைக்கானக் காரணம்: அரசியல் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கிறது. இந்த மேயர் பதவி சீனியம்மாளுக்குக் கிடைக்கவேண்டியது என்று கூறப்படுகிறது, மேலும் எம்.எல்.ஏ சீட் வேண்டும் என்று சீனியம்மாள் உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுத்ததாகவும் அதனை அவர் திருப்பித்தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி பல பிரச்னைகள் இருவருக்குள்ளும் இருந்ததால், கார்த்திகேயன் இந்தக் கொலையை திட்டமிட்டு செய்துள்ளார். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டியின் வசம் சென்றுள்ளது. 

NEXT STORY
மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தற்போது வரை நடந்தது என்ன?! Description: நெல்லை திமுக மேயர் உமா மகேஸ்வரி கொலைவழக்கை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த வழக்கில் இதுவரை இந்த வழக்கில் நடந்தது என்ன?
loadingLoading...
loadingLoading...
loadingLoading...