3-வது திருமணமா? மோசடி கணவனை அடித்துத் துவைத்த மனைவிகள்! - வீடியோ

குற்றம்
Updated Sep 11, 2019 | 12:16 IST | Times Now

மூன்றாவது திருமணம் செய்ய சமூக வலைதளங்களில் பெண் தேடிய அரவிந்தை முதல் இரண்டு மனைவிகள் தேடிச் சென்று தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Wives thrash husband for planning 3rd marriage, மூன்றாவது திருமணத்திற்கு பெண் தேடியவனை தாக்கிய மனைவிகள்
மூன்றாவது திருமணத்திற்கு பெண் தேடியவரை தாக்கிய மனைவிகள்  |  Photo Credit: Facebook

கோவை: மூன்றாவது திருமணம் செய்ய இருந்தவரை முதல் இரண்டு மனைவிகள் அடித்து துவம்சம் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், சூலூர், நேரு நகரை சேர்ந்தவர் அரங்க அரவிந்த் தினேஷ். 26 வயதாகும் இவன் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

2016-ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் அரவிந்த். திருமணமான இரண்டு வாரத்தில் அரவிந்த் மற்றும் அவனது பெற்றோர் தன்னை கொடுமை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார் பிரியதர்ஷினி.

இதனை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை முதல் மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார் அரவிந்த். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. அரவிந்த் மற்றும் அரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அனுப்பிரியா, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், மூன்றாவது திருமணம் செய்ய சமூக வலைதளங்களில் பெண் தேடியுள்ளார் அரவிந்த். இதனை அறிந்த அனுப்பிரியா மற்றும் பிரியதர்ஷினி அவரது வீட்டிற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளனர். உரிய பதில் கிடைக்காததை தொடர்ந்து அரவிந்த் பணிபுரியும் தொழிற்சாலைக்கு சென்று அவரை சரமாரியாக அடித்து துவைத்தனர். இதனையடுத்து, அரவிந்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...