பாலுக்கு அழுத குழந்தை..வாட்ஸப் மோகத்தால் வாயை பொத்தி கொன்ற தாய்!

குற்றம்
Updated May 02, 2019 | 15:20 IST | Times Now

ஏப்ரல் 30ம் தேதியன்று இரவு, குழந்தை திடீரென்று கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறி தாய் ஆதிரா கதறினார்.

kerala, கேரளா
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

திருவனந்தபுரம்: கேரளாவில் வாட்ஸப் சாட் செய்ய இடையூறாக இருந்ததாக குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், சேர்த்தல பட்டினங்காடு, கொல்லம் வெளி காலனியில் வசித்து வரும் தம்பதியினர் ஷாரோன் மற்றும் ஆதிரா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் ஆதிஷா என்கிற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 30ம் தேதியன்று இரவு, குழந்தை திடீரென்று கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறி தாய் ஆதிரா கதறினார். அவருடைய கதறலைப் பார்த்து அக்கம்பக்கத்தினரும் மனவேதனை அடைந்தனர்.

ஆனால், குழந்தையின் மேல் அடி எதுவும் இல்லாமல் விழுந்து இறந்திருந்த விதம் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். 

மருத்துவமனையில், இறந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உடம்பில் காயம் எதுவும் இல்லை என்றும், கீழே விழுந்திருக்கவும் வாய்ப்பில்லை என்றும், மூச்சு திணறியதால்தான் குழந்தை இறந்ததாக கூறினர். 

இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் ஆதிராவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இரவு 12.30 மணிக்கு தான் செல்போனில் தோழியுடன் வாட்ஸப் சாட் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது குழந்தை ஆதிஷா பாலுக்கு அழுததால் கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என்று தட்டிக் கொடுத்ததாக கூறினார். 

ஆனால், குழந்தை இன்னும் சத்தமாக அழுததால் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை கைகளால் பொத்தி வைத்தபடி, கவனமின்றி வாட்ஸாப்பில் மூழ்கியிருந்ததால் குழந்தை இறந்து போனது என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் ஆதிராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...