சிதம்பரம்: முன்னாள் காதலி மீது மாணவன் ஆசிட் வீச்சு

குற்றம்
Updated Sep 10, 2019 | 11:40 IST | Mirror Now

இருவரும் காதலித்த நிலையில் மாணவி தனது காதலை முறித்துக்கொண்டதாக தெரிகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத முத்தமிழன் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளான்.

Chidambaram student throws acid on ex-girlfriend, முன்னாள் காதலி மீது மாணவன் ஆசிட் வீச்சு
முன்னாள் காதலி மீது மாணவன் ஆசிட் வீச்சு | பிரதிநிதித்துவப் படம்  |  Photo Credit: Getty Images

கடலூர்: மாணவி மீது சக மாணவன் ஆசிட் வீசிய சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திங்கட்கிழமை நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முகம் மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியின் பெயர் முத்தமிழன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முத்தமிழனும் பாதிக்கப்பட்ட மாணைவியும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் காதலித்த நிலையில் மாணவி தனது காதலை முறித்துக்கொண்டதாக தெரிகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத முத்தமிழன் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், திங்கட்கிழமை மாணவியிடம் சென்று மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மாணவி. இதனையடுத்து, கல்லூரியில் முடிந்து விடுதிக்கு செல்லும் வழியில் முத்தமிழன் மாணவி மீது ஆசிட் வீசியுள்ளார்.

இதில், 19 வயதாகும் மாணவியின் முகம் மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. சக மாணவர்கள் விரைந்து மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். முத்தமிழனும் மாணவர்களிடம் சிக்கி சரமாரியாக தாக்கப்பட்டார். சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...