வாவ் காயின் மூலம் 18 லட்ச ரூபாய் மோசடி, தப்பமுயன்ற பெண்மணி கைது

குற்றம்
Updated Jul 17, 2019 | 16:12 IST | Times Now

சென்னையில் வாவ் காயின் மோசடியில் ஈடுபட்ட பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Wow Coin Fraud
வாவ் காயின் மோசடி   |  Photo Credit: Times Now

சென்னை: வாவ் காயின் மோசடியில் இந்திராணி என்பவர் 18 லட்சம் ரூபாய் இழந்ததை தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்ட பெண்மணி ஒருவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவருக்கு பேஸ்புக் மூலம் மாதேஷ் என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்திராணியிடம் கிரிப்டோகரன்சியான வாவ் காயினை அறிமுகப்படுத்தியுள்ளார்  மாதேஷ். இதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அண்ணா நகரில் வசித்து வந்த பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் ஆகியோர் ஆன்லைனில் வாவ் காயின் முதலீடு செய்ய உதவுவார்கள் என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளார்.  

வாவ் காயினில் முதலீடு செய்தால், அந்த பணம் ஒரே வருடத்தில் 10 மடங்காக உயரும் என்றும், 10 ஆண்டுகளில் 1000 மடங்கு உயரும் என்று அவர்கள் கூறியதை நம்பி இந்திராணி ரூபாய் 18 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி எந்த பணமும் வரவில்லை. அவர்களிடம் பணத்தை பற்றி இந்திராணி கேட்டபோது வாவ் காயின் நிறுவனம் நஷ்டத்தில் செல்வதாகவும், ஆதனால் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறி ஏமாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய முயன்ற போது அதனை போலீசார் ஏற்க மறுத்திவிட்டனர். பின்பு இந்திராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை தொடர்ந்து உயர்நீதி மன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.   

வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர். மேலும் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாத வண்ணம் விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதனபடி நேற்று விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்ற  பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை போலீசார் கைது விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தை வங்கிகள் நிர்ணயிப்பதில்லை. மேலும் அதனை இந்திய அரசாங்கமோ ரிசர்வ் வங்கியோ அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் அதனை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் இது போல மோசடிகளில் பலர் ஏமாந்துவருகின்றனர்.                
 
   
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...