மனைவியை கொன்றுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்த காவலர்

குற்றம்
Updated Aug 19, 2019 | 13:05 IST | Times Now

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த காவலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொன்ற காவலர் தற்கொலை,Police officer kills his wife and commits suicide
மனைவியை கொன்ற காவலர் தற்கொலை  |  Photo Credit: Getty Images

சென்னை: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த காவலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த புத்தகரம் திருமால் நகரை சேர்ந்தவர் நரேஷ்(39). இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீ என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வருண் என்ற மகனும் உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் ஜெயஸ்ரீ பெரம்பலூரில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்பு நரேஷ் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.    

இந்நிலையில் நேற்று இரவு இவர்களது மகன் வருண் நடன வகுப்புக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் தன் மனைவி ஜெயஸ்ரீயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்பு அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். நரேஷ், ஜெயஸ்ரீ ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் 7 வயது சிறுவன் வருண் தன் தந்தையையும் தாயையும் இழந்து பரிதாப நிலையில் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.      

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...