பணிப்பெண் பெயரில் 75 லட்சம் சொத்து; ஓய்வுபெற்ற அதிகாரி மீது சிபிஐ வழக்கு

குற்றம்
Updated May 30, 2019 | 11:22 IST | Times Now

சரிதா வேலைக்குச் சேரும்போது அவரது வங்கிக்கணக்கில் ரூபாய் 700 இருந்திருக்கிறது. ஆனால், விசாரணை செய்தபோது அவரது சொத்துகள் 75.29 லட்சமாக உயர்ந்துள்ளது. 

CBI
CBI  |  Photo Credit: Indiatimes, Representative Image

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றியவர் ஏ.கே.யாதவ். இவர் இந்தப்பதவியில் 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை பணியில் இருந்து பின் ஓய்வுபெற்றதாகக் கூறப்படுகிறது. இவர் அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று சிபிஐக்குத் தகவல் வந்ததையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியானத் தகவல்கள் கிடைத்துள்ளன.

விசாரணையில் அவரது வருமானத்துக்கு அதிகமாக சுமார் ஒரு கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளதாகத் தெரியவந்தது. அவரது வருமானம் சுமார் 32 லட்சம் எனவும் ஆனால் விசாரணையில் அவருக்கு ரூபாய் 1.37 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளது. வருமானத்தில் வராத சொத்துகள் அனைத்தும் அவரது பணிப்பெண் சரிதா என்பரது பெயரில் யாதவ் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு சரிதா வேலைக்குச் சேரும்போது அவரது வங்கிக்கணக்கில் ரூபாய் 700 இருந்திருக்கிறது. ஆனால், விசாரணை செய்தபோது அவரது சொத்துகள் 75.29 லட்சமாக உயர்ந்துள்ளது. 

அதோடு அவரது மனைவி பேயரிலும் பல சொத்துகள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. வீட்டுப் பணிபெண்ணுக்கு பணமாக மட்டும் இல்லாமல் வீட்டுமனை, தங்கம் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவருக்கு குமரேசன் என்பவர்தான் இந்த சொத்துக்களை வாங்க உதவி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் யாதவ், குமரேசன், சரிதா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

NEXT STORY