சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - கேரளா பாதிரியார் மீது வழக்கு பதிவு!

குற்றம்
Updated Sep 21, 2019 | 12:46 IST | Times Now

தேவாலயத்திற்கு ஆசி பெற வந்த மூன்று 9-வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கேரள பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாதிரியார் மீது வழக்கு பதிவு,Catholic priest in Kerala accused of molesting minors
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாதிரியார் மீது வழக்கு பதிவு  |  Photo Credit: Twitter

கேரளா: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கிறிஸ்தவ பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எர்ணாகுளம் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் பழமையான சிரியன் கத்தோலிக் தேவாலயம் ஒன்று இயங்கிவருகிறது. அந்த ஆலயம் அருகில் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மூன்று 9 வயது சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி(70) என்பவரிடம், சென்ற மாதம் ஆசி பெற சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகளுக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு தந்ததாக கூறப்படுகிறது.

இதை பற்றி அந்த சிறுமிகள் பள்ளி ஆசிரியரிடம் சென்று கூறியுள்ளனர். பின்னர் அந்த ஆசிரியர் ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டதின் கீழ் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது இந்த குற்றம் சுமத்தப்பட்டதை ஒட்டி தேவாலயப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புகார் தெரிவித்ததில் இருந்து, அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை காவல்துறை விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்குமாறு தேவாலயம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது பற்றி வடக்கேகரா காவல் நிலைய அதிகாரி கூறுகையில், அவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு அந்த சிறுமிகளிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், தற்போது தலைமறைவாக உள்ள அந்த பாதிரியாரை தேடி வருவதாகவும் கூறினார்.    
 

NEXT STORY