சென்னையில் பெண் தொழிலதிபர் தூக்குப் போட்டு தற்கொலை

குற்றம்
Updated Sep 12, 2019 | 13:54 IST | Mirror Now

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் என்பவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Business women commits suicide in chennai
Business women commits suicide in chennai  |  Photo Credit: Getty Images

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் என்பவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள லேன்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவனத்தின் இணை இயக்குனராக இருந்தவர் ரீட்டா  ஜானகி லிங்காலிங்கம்.  ரீட்டாவின் கணவரும் லேன்சன் டொயோட்டா ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில் , கார் விற்பனை குறைவு காரணமாக ஷோரூம் மேலாளர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர், தனது கணவருடனும் ரீட்டா சண்டையிட்டதாக கூறப்படுகிறது. சண்டை காரணமாக கணவர் வீட்டுக்கு வரவில்லை. சில நாட்களாக அவர் வெளியில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விரக்தியில் இருந்த ரீட்டா இன்று நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரீட்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...