சென்னை: பேருந்தில் இருந்து பொலபொலவென விழும் மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ

குற்றம்
Updated Jun 18, 2019 | 12:19 IST | Times Now

எதிர்பாராத விதமாக பேருந்து மேற்கூரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் பொல பொலவென கீழே விழுந்தனர்.

chennai students fall off from bus
chennai students fall off from bus   |  Photo Credit: Twitter

பஸ் டே கொண்டாட்டத்தின் பேருந்தில் இருந்து மாணவர்கள் கீழெ விழும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.  பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி மாணவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர். வருடாடம் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கும் தினத்தன்று சென்னையில் மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவார்கள். ஆனால் இந்தக் கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக ஒவ்வொரு வருடமும் போலீஸார் இதனைத் தடுக்கும் முயற்சியில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மாணவர்கள் என்பதால் ஒரு கைது செய்வதோ, தேவையில்லாமல் அடித்தாலே பிரச்னை பெருசாகும் என்பதால் ட்ராஃபிக் போலீஸ் அதிகாரிகளும் பாத்துபாத்துதான் எச்சரிக்க வேண்டி உள்ளது. 

நேற்று அப்படி பல மாணவர்கள் ஓடும் அரசு பேருந்தில் மேற்கூரையில் ஏறியும், இறங்கியும் பார்க்கவே பதட்டமூட்டும் வகையில் சாகசங்களைச் செய்துகொண்டு இருந்தனர்.  இதனால் சென்னையில் பல இடங்களில் ட்ராஃபிக் ஜாம் ஏற்பட்டது. மேலும் கும்பலாக ஒரு 30 மாணவர்கள் பஸ் கூரையின் மேல் நின்று கத்திக் கூச்சல் போட்டபடியே வந்துள்ளனர். அப்போது பஸ் முன்னால் சென்ற பைக் மிகவும் நெருக்கமாக வந்ததால், பஸ் ட்ரைவர் சடன் ப்ரேக் அடித்தார். இதில் பொல பொலவென அனைத்து மாணவர்களும் கீழே விழுந்தனர். அதிர்ஷவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக 24 மாணவர்களை போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி பிடித்துச் சென்றனர். 

 

NEXT STORY
சென்னை: பேருந்தில் இருந்து பொலபொலவென விழும் மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ Description: எதிர்பாராத விதமாக பேருந்து மேற்கூரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் பொல பொலவென கீழே விழுந்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola