வங்கதேச பயங்கரவாதி சென்னையில் கைது!

குற்றம்
Updated Sep 10, 2019 | 14:57 IST | Times Now

2018 புத்தகயா குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா சென்னை நீலாங்கரை பகுதியில் வேறு பெயரில் தங்கி இருந்தாக சொல்லப்படுகிறது.

Bangladeshi terrorist arrested in Chennai, சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி ஷேக் அஷத்துல்லா
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி ஷேக் அஷத்துல்லா  |  Photo Credit: ANI

சென்னை: 2018 புத்தகயா குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஷேக் அஷத்துல்லா கொல்கத்தா என்.ஐ.ஏ அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா சென்னை நீலாங்கரை பகுதியில் வேறு பெயரில் தங்கி இருந்தாக சொல்லப்படுகிறது. புத்தகயா குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சென்ற ஆண்டு பெங்களூருவில் ஹபிபுல் ரஹ்மான் என்பவன் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், விசாரணையின் போது ஹபிபுல் ரஹ்மான் அளித்த தகவலின் பெயரில் தற்போது ஷேக் அஷத்துல்லா  கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் ஜமாத்-உல்-முஜாஹிதின் பயங்கரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஷேக் அஷத்துல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அங்கிருந்து அவரை கொல்கத்தா அழைத்து செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...