அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு..9 பேர் உயிரிழப்பு,16 பேர் படுகாயம் !

குற்றம்
Updated Aug 04, 2019 | 18:38 IST | Times Now

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Back to Back gun shooting in US
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு  |  Photo Credit: AP

டெக்சாஸ்: அமெரிக்காவில் கடந்த  24 மணிநேரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 9 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் எல் பேஸோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26  பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேட்ரிக் கிரஸ்சியஸ் (21) என்பவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்தது மட்டும் அல்லாது சந்தேகத்திற்குரிய 3 நபர்களை எல் பேஸோ போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவில் உள்ள ஓஹிவோவில் உள்ள மதுபான பாரில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளார். அது மட்டும் இன்றி 16 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த கொடூர சம்பவத்தை செய்தவரின் அடையாளம் இன்னும் தெரியாத நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்படி 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து நடந்த இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

 

 

இந்த ஆன்டு மட்டும் அமெரிக்காவில் மக்கள் கூட்டமாக கொல்லப்படுவது  இது 22-வது முறை. இதற்கு முன் நடந்த 20 சம்பவங்களில் கிட்டத்தட்ட 96 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு பெரிய கட்டுப்பாடு இல்லாத நிலையில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அங்கு நடந்துவருகிறது. மக்கள் தற்போது வெள்ளை மாளிகை முன் கூட்டமாக நின்று, ஆயுத கட்டுப்பாடுகளை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.
 

NEXT STORY