சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

குற்றம்
Updated Aug 30, 2019 | 16:35 IST | Mirror Now

நெடுநாட்களாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த பேர்ள் பஞ்சாபிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

Pearl Punjabi, பேர்ள் பஞ்சாபி
பேர்ள் பஞ்சாபி  |  Photo Credit: Twitter

மும்பை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையில் உள்ள ஓஷிவாரா பகுதியில் இத்துயரச் சம்பவம் நேற்று இரவு நடந்தேறியது. தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் பேர்ள் பஞ்சாபி என்று தெரிய வந்துள்ளது. நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த பேர்ள் பஞ்சாபிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது தாயருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேர்ள் பஞ்சாபியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தசம்பவம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி பிபின் குமார் தாக்கூர் கூறும்போது, ”நள்ளிரவு 12:15 முதல் 12:30 மணிக்குள்ளாக இச்சம்பவம் நடைபெற்றது. ஏதோ சத்தம் கேட்டது. தெருவில் யாரோ கூச்சலிடுவதாக நினைத்தேன். என்னவென்று பார்க்க சென்றேன். திரும்பி வரும்போது அந்த பெண் தங்கியிருந்த மூன்றாவது மாடியில் சத்தம் கேட்டது. பின்னர் அவர் கீழே விழுந்து கிடந்தார்” என்றார்.

பேர்ள் பஞ்சாபி மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் தனது தாயாருடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அங்கிருந்தவர்கள் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...