தூத்துக்குடியில் மற்றுமொரு புதுமணத் தம்பதி ஆணவக் கொலை

குற்றம்
Updated Jul 04, 2019 | 12:34 IST | Times Now

சென்ற வாரம் மேட்டுப்பாளயத்தில் ஆணவக் கொலையால் தர்ஷினியும் கனகராஜும் உயிரிழந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் மற்றொரு ஆணவக்கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

Another honor killing happened in thoothukudi
Another honor killing happened in Thoothukudi  |  Photo Credit: Twitter

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த பல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜோதியும் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சோலைராஜ் என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலைப் பற்றி அறிந்த ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்துக்கு முன்பு குளத்தூரில் உள்ள உப்பளத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகும் இவர்களுக்கு ஜோதி வீட்டில் இருந்து எதிர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தற்போது பெரியார் நகரில் வசித்து வருகிறார்கள். திருமணத்துக்கு பின்பு ஜோதி வீட்டில் இருக்க, சோலை ராஜ் மட்டும் வேலைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். ஜோதியை கை கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற இவர்களது உடல்களை சோலைராஜ் வீட்டார் வாங்க மறுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின் போலீசார் சமாதானம் செய்து உடல்களை அனுப்பி வைத்தனர். இந்தக் கொலையை பெண் வீட்டார்தான் செய்தார்கள் என்று அங்கிருப்பவர்கல் கூறினாலும், இன்னும் உறுதியாக யார் கொலை செய்தார்கள் என்றுத் தெரியவில்லை. போலிசார் தற்போது ஜோதியின் வீட்டில் அவரது உறவினர்களைப் பிடித்து அவர்களிடம் திவீர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். புதுமணத் தம்பதி இப்படி சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

NEXT STORY
தூத்துக்குடியில் மற்றுமொரு புதுமணத் தம்பதி ஆணவக் கொலை Description: சென்ற வாரம் மேட்டுப்பாளயத்தில் ஆணவக் கொலையால் தர்ஷினியும் கனகராஜும் உயிரிழந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் மற்றொரு ஆணவக்கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola