பிஸ்டல்,வாள், AK 47 துப்பாக்கி, கோவில் கலசம் - தேனியில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்!

குற்றம்
Updated May 11, 2019 | 15:30 IST | Mirror Now

இவ்வளவு ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இருந்து இருப்பது தெரியவந்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

teni robbers
தேனி கொள்ளையர்கள்  |  Photo Credit: Twitter

தேனி மாவட்டம் போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் கௌரி மோகன்தாஸ் என்பவரது வீட்டில் குவியல் குவியலாக துப்பாக்கி, கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டு இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

 கௌரி மோகன்தாஸை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் தங்கி இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் முன் விஷயம் அறிந்து, அந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். கௌரி மோகன்தாஸ் மட்டுமே கையில் சிக்கி உள்ளார். அந்த வீட்டில் ஏகே 47 துப்பாக்கிகள், ஏர் பிஸ்டல், நாட்டுத்துப்பாக்கி, வாள், ஈட்டி, கத்தி போன்ற பல ஆயுதங்களையும் 10க்கும் மேற்பட்ட மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனோடு கோவில் கலசமும் சுவாமி சிலையும்  இருந்திருக்கிறது. இதனால் கோவில் கலசங்களை வைத்து மோசடி செய்யவும் அந்த கும்பல் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

 இவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகள் அனைத்தும் போலியானவை என்று போலீசார் கூறி இருக்கிறார்கள். அதனால் எதிராளியை பயமுறுத்துவதற்காக மட்டும் இந்த வகை துப்பாக்கிகளை வைத்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. யார் இவர்கள், எதற்காக இங்கு தங்கி இருக்கிறார்கள், இதற்கு முன்னால் எதும் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனரா என்ற ரீதியில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கைது செய்யப்பட்ட கௌரி மோகன்தாஸ் இதற்கு முன்னால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார்.  அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வளவு ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இருந்து இருப்பது தெரியவந்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

NEXT STORY
பிஸ்டல்,வாள், AK 47 துப்பாக்கி, கோவில் கலசம் - தேனியில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்! Description: இவ்வளவு ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இருந்து இருப்பது தெரியவந்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola