நேர்கொண்ட பார்வை பாக்கச் சென்ற வாலிபர்: எரித்துக் கொலை

குற்றம்
Updated Aug 28, 2019 | 17:02 IST | Mirror Now

நேர்கொண்ட் பார்வை படத்துக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற வாலிபர் தனது நண்பர்களால் கொலை செய்து எரித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

Ajith fan killed and burnt by his friends in Trichy
கொலை செய்யப்பட்ட தமிழழகன்  |  Photo Credit: Twitter

சமீபத்தில் வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைப் பார்க்க செல்வதாக கூறிச் சென்ற தமிழழகன் கொலை செய்து எரிக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. 

திருச்சி செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன். இவரும் காக்கா கார்த்திக், மணிகண்டன், ஆட்டொ ட்ரைவர் ஜெகன் ஆகியோர் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்களது தனிப்பட்ட காரணத்துக்காக ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி பிரபாகர் என்பவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் தமிழழகன் தவிர மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு உடனேயே ஜாமீனிலும் வெளிவந்துள்ளனர். 

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீசாவதை முன்னிட்டு பேனர் வைக்கப்போவதாகவும் மறுநாள் காலையில் படம் பார்த்துவிட்டுதான் வீட்டுக்கு வருவேன் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறான் தமிழழகன். இந்நிலையில் அவர் வீடு திரும்பாததாலும், சென்ற வாரம் அரியமங்கலத்தில் அவரது பைக் கிடைத்ததாலும் அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவரது நண்பர்கள் மூவரும், ஒரு டாஸ்மாக்கில் தமிழழகனைக் கொலை செய்தது குறித்து பேசிக் கொண்டிருந்ததை கேட்டு போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் இவர்களிடம் போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. 

பிரபாகரனை கொலை முயற்சி செய்த விவகாரத்தில் தமிழழகன் மீது வழக்கு போடாத ஆத்திரத்தில் இருந்திருக்கின்றனர் நண்பர்கள் மூவரும். ஆனால் நட்பாக இருந்தாலும் மனத்துக்குள் வன்மத்துடன் இருந்துள்ளனர். அஜித் படத்துக்காக பேனர் வைக்கும்போது இதுபற்றி பேச்சு எழுந்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழழகனை ஆத்திரத்தில் கொலை செய்துள்ளனர். பின் சடலத்தை ஜெகன் ஆட்டோவில் ஏற்றி பொன்மலை கணேசபுரம் சுடுகாட்டில் எரித்து விட்டனர். அதன்பிறகு தலைமறைவுக் ஆகியுள்ளனர். 

போலீஸார் தமிழழகனின் போனில் காக்கா கார்த்திக் தான் கடசியாக பேசியிருக்கிறார் என்று அவரைத் தேடிய போது ஆள் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் மூவரும் டாஸ்மாக்கில் தாங்களே கொலை செய்தது பற்றி பேசிக் கொண்டிருக்கையில் மாட்டியுள்ளனர். இதில் ஆட்டோ ட்ரைவர் ஜெகன் மட்டும் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரைத் தேடி வருகிறார்கள். 20 நாட்களுக்கும் மேலாக தேடிவந்த நபரை, நண்பர்களே கொலை செய்து எரித்த சம்பவம்  திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...