கோவையில் அதிமுக கட்சியின் கொடிகம்பம் சரிந்து விழுந்ததில் பெண் தடுமாறி கீழே விழுந்து லாரி மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் அதிமுக பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் இல்ல திருமண விழா 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதற்காக அப்பகுதியில் சாலையின் நடுவே அதிமுக கட்சியின் கொடிக்கம்பம் வரிசையாக நட்டுவைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை அவ்வழியே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனுராதா இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது.
உடனே அவர் சடன் ப்ரேக் அடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழ பின்னால் வந்த லாரி அவரின் கால்மீது ஏறிவிட்டது. இதில் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட்டது என்றும் மற்றொரு காலில் நரம்பு கட்டாடி விட்டது என்றும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றுதான் சுபஸ்ரீ வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக திருமண பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள் தங்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என்று கூறி வந்தது. உயர்நீதிமன்றமும் இதனைக் கண்டித்து பேனை வைக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொடிகம்பம் விழுந்து பெண் படுகாயம் அடைந்துள்ளாது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.