மதுரையில் ஆம்னி பஸ் மோதி பெண் காவலர், குழந்தை உட்பட 4 பேர் பலி!

குற்றம்
Updated May 09, 2019 | 09:12 IST | Twitter

சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மதுரை டி.பி.கே பாலத்துக்கு அருகே வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

Accident: omni bus kills 4 people in madurai
Accident: omni bus kills 4 people in madurai  |  Photo Credit: Representative Image

மதுரையில் நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ் மோதி பெண் காவலர் உட்பர 4 பெர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மதுரை டி.பி.கே பாலத்துக்கு அருகே வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையின் மீதும், சாலையைக் கடந்த இருவர் மீதும் பஸ் போதியது. 

இதில் உடல் நசுங்கி பைக்கில் சென்ற இரு பெண்களும் சாலையைக் கடந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் பெண் காவலர் ஜோதி மற்றும் அவரது உறவினர் சத்தியவாணி என்பதும் தெரியவந்தது. சாலையைக் கடந்தவர்களில் திருச்சியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பரும், சத்தவாணியின் குழந்தையும் மீட்டு போலீசார் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அடில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தார். தற்சமயம் பேருந்து ஓட்டுநரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

* மேலதிகத் தகவல்கள் கிடைத்ததும் இந்தக்கட்டுரை அப்டேட் செய்யப்படும்

NEXT STORY
மதுரையில் ஆம்னி பஸ் மோதி பெண் காவலர், குழந்தை உட்பட 4 பேர் பலி! Description: சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மதுரை டி.பி.கே பாலத்துக்கு அருகே வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola