ஏற்கனவே ரெண்டு மனைவி...சென்னையில் 3வது மனைவி - கேரள நபரின் தில்லாலங்கடி!

குற்றம்
Updated Jun 19, 2019 | 15:25 IST | Times Now

அஜித்குமாருக்கு 27 வயதான தேவிகா என்கிற மனைவியும், 6 வயது மகன் ஒருவரும் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தேவிகா, அஜித்குமார் மீது புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

tamil nadu, தமிழ்நாடு
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் 46 வயதான அஜித்குமார். சாலிகிராமத்தில் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.

அஜித்குமாருக்கு 27 வயதான தேவிகா என்கிற மனைவியும், 6 வயது மகன் ஒருவரும் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தேவிகா, அஜித்குமார் மீது புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர், அஜித்குமாருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளதாகவும், ஏற்கனவே அவர்களுடன் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், அஜித்குமார் 1998ம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்கிற பெண்ணையும், 2001ம் ஆண்டு டெலிலா என்கிற பெண்ணையும் அவர் திருமணம் செய்துள்ளதாக குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகார் குறித்து அஜித்குமாரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அதில் அவர் இந்த குற்றச்சாட்டுகளை ஒத்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

NEXT STORY
ஏற்கனவே ரெண்டு மனைவி...சென்னையில் 3வது மனைவி - கேரள நபரின் தில்லாலங்கடி! Description: அஜித்குமாருக்கு 27 வயதான தேவிகா என்கிற மனைவியும், 6 வயது மகன் ஒருவரும் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தேவிகா, அஜித்குமார் மீது புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola