4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கழிவறை வாளிக்குள் இருந்து சடலமாக மீட்பு

குற்றம்
Updated Jun 28, 2019 | 12:00 IST | Mirror Now

வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A 4-Year-old girl Sexually abused and Killed
A 4-Year-old girl Sexually abused and Killed  |  Photo Credit: Getty Images

சென்னை: சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 4 வயதில் மகளும், 8 வயதில் மகனும்  உள்ளனர். குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் பெண் குழந்தையை தனியாக விட்டுவிட்டு மகனை டியூசனுக்கு அழைத்து சென்றுள்ளார் அவரது தாய். சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பெண் குழந்தையை காணவில்லை.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த கணவர், மனைவியுடன் சேர்ந்து சிறுமியை வீட்டிற்கு அருகில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறையில் இருந்த வாளியில் ரத்தக்கறையுடன் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் தங்களது குழந்தை சடலமாக இருந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுமியின் உறவினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் (60) என்பவர் அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும், மீனாட்சி சுந்தரத்தின் வீட்டில் சில தடயங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

NEXT STORY
4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கழிவறை வாளிக்குள் இருந்து சடலமாக மீட்பு Description: வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola