ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: சரவண பவன் ராஜகோபால் சரணடைய அதிரடி உத்தரவு

குற்றம்
Updated Jul 09, 2019 | 11:17 IST | Times Now

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் பி.ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Saravana Bhavan Owner P.Rajagopal
சரவணபவன் உரிமையாளர் பி.ராஜகோபால்  |  Photo Credit: Twitter

சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஹோட்டல் சரவணபவனின் உரிமையாளர் பி.ராஜகோபால் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். ஜோதிடர்கள், அவர் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் மேன்மை அடையளம் என்று கூறியுள்ளனர். அதன் படி ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் மூன்றாவதாக ஜீவஜோதியை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் ஜீவஜோதி இதற்கு மறுப்பு தெரிவித்து தன் காதலனான பிரின்ஸ் சந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ராஜகோபால் ஜீவஜோதியின் கணவரான சந்தகுமாரை அடியாட்கள் வைத்து கடத்தி சென்று கொலை செய்தார். சந்தகுமாரை கடத்தி சென்று கொலை செய்த குற்றத்துக்காக இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 55 லட்சம் அபராதமும் விதித்தது. அவருக்கு உடந்தையாக இருந்த மீதி 9 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், அரசு தரப்பில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. பின் 2009-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு அளிக்கப்பட்ட 10 ஆ‌ண்டு ‌சிறைத‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக தெரிவித்தது.

ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அவருக்கு அளிக்கபட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. ஜூன் 7 ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், அவர் உடல்நிலை காரணம் காட்டி சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், உடல்நிலையை காரணம் காட்டுவதாக இருந்தால் கடைசி நேரத்தில் ஏன் ? மனுத்தாக்கல் செய்கிறீர்கள் என சரவண பவன் தரப்பை நீதிபதி கடுமையாக கேட்டார். 

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் திங்கட்கிழமை 9 பேர் சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது.           
 

NEXT STORY
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: சரவண பவன் ராஜகோபால் சரணடைய அதிரடி உத்தரவு Description: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் பி.ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola