டிக் டாக் மோகம்.. விஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட இளம்பெண் பலி

குற்றம்
Updated Jun 12, 2019 | 13:09 IST | Mirror Now

டிக்டாக் வீடியோ மோகத்தால் பெரம்பலூர் அருகே இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

24 year old women committed suicide
டிக்டாக் மோகத்தால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்  |  Photo Credit: YouTube

பெரம்பலூர்: சிங்கப்பூரில் இருக்கும் கணவர் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடிப்பது போல டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தற்போது டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமை என்றே சொல்லாமல். அந்த அளவுக்கு இதன் மோகம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலர் இதில் மூழ்கி கிடைப்பது வேதனைக்குரியது. அதிலும் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அளவில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள். சில வீடியோக்கள் ரசிக்க வைத்தாலும், பல வீடியோக்கள் முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருக்கிறது. குறிப்பாக டிக்டாக்கில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது பல குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

இந்நிலையில் டிக்டாக் மோகம் இரண்டு குழந்தைகளுக்கு தாயின் உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி அனிதா (24). தம்பதிக்கு மோனிஷா என்கிற மகளும் அனீஷ் என்ற மகனும் உள்ளனர். பழனிவேல் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

tiktok

அனிதா டிக்டாக் வீடியோ வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தைகளை கூட கவனிக்காமல் அதிலேயே மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.  டிக் டாக்கில் நடனமாடுவது, பாடல் பாடுவது என தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது செயல்பாடுகள் குறித்து பழனிவேலுக்கு அவரின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆத்திரத்தில் அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார் பழனிவேலு. இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து பூச்சி மருந்தை குடித்துள்ளார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்டாக்கில் வீடியோவாக பதிவு செய்தார்.

சிறிது நேரத்தில் கண்கள் சொருகி அவர் மயங்கி விழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன்பின் அக்கம்பக்கத்தின் அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிக் டாக் வீடியோ மோகத்தில் அவரின் இரு குழந்தைகளும் தாயை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NEXT STORY