பொள்ளாச்சியைப் போலவே சென்னையிலும் கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்!

குற்றம்
Updated Apr 15, 2019 | 14:30 IST | Times Now

சென்னையில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து, பாலியல் மிரட்டலில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்  |  Photo Credit: Times Now

சென்னை : பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அதேபோன்ற ஒரு பாலியல் மிரட்டல் சம்பவம் சென்னையிலும் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் கல்லூரி ஒன்றில் இஞ்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருடன் பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவர், மற்றொரு கல்லூரியில் படித்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியிடம் பழகியுள்ளார். சில காலம் நண்பராக பழகி வந்த அந்த மாணவன், திடீரென அந்த மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். 

அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தநிலையில், தன்னை காதலிக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என அந்த மாணவன் மிரட்டியுள்ளான். இதனையடுத்து, மாணவியும்  வேறு வழியின்றி காதலிக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்தசில நாட்களுக்குமுன், கல்லூரிக்கு கொண்டு சென்றுவிடுவதாகக்கூறி, மாணவியை தன் பைக்கில் ஏற்றிக்கொண்ட சென்ற மாணவன், கிழக்கு கடற்கரை சாலையை நோக்கிச் சென்றுள்ளான்.

இதனால், சந்தேகமடைந்த மாணவி கேட்டபோது, நண்பர்கள் விருந்து அளிப்பதாகக்கூறி, தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு மாணவியுடன் நெருக்கமாக இருப்பதுபோல், தன் நண்பன் உதவியுடன் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான். மேலும், தன் நண்பனுடன் நெருக்கமாக இருக்குமாறுகூறி மாணவியை வற்புறுத்தியுள்ளான் அந்த மாணவன். இல்லையென்றால், சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி விடப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, வீட்டில் தனிமையில் இருப்பதைப் பார்த்த பெற்றோர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தனக்கு நேர்ந்த பிரச்சனைகுறித்து மாணவி கதறி அழுதபடி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாணவனிடமும், அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு எந்த பெண்ணிடமும் இதுபோன்ற பாலியல் மிரட்டலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

NEXT STORY
பொள்ளாச்சியைப் போலவே சென்னையிலும் கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்! Description: சென்னையில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து, பாலியல் மிரட்டலில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola