காதலைக் கண்டித்த தொழிலதிபர் அப்பா: எரித்துக் கொன்ற 15 வயது மகள்!

குற்றம்
Updated Aug 20, 2019 | 12:17 IST | Mirror Now

15 வயது சிறுமி தனது தந்தையை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து, எரித்துக் கொன்றுள்ளார்.

15 year old daughter burnt her father in Benglauru
தந்தையை எரித்துக் கொன்ற மகள்  |  Photo Credit: Getty Images

பெங்களூரு: பெங்களூருவில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் அவரது 15 வயது மகளே அவரைக் மயக்கமருந்து கொடுத்து கொலை செய்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெய்குமார் ஜெயின். இவருக்கு வயது 41. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் இதே பகுதியில் வசிக்கும் பிரவீன் என்ற பி.காம் படித்து வரும் இளைஞரை காதலித்து வந்துள்ளதாகவும், இவர் அடிக்கடி ஜெய்குமார் வீட்டுக்கு வந்துசென்றதும் தெரியவந்துள்ளது. இதனால் ஜெய்குமார் மகளை கண்டித்ததோடு, அவரின் செல்போனையும் வாங்கி வைத்துள்ளார். கடந்த வாரம் இதன் காரணமாக ஜெய்குமார் மகளை பெல்டால் அடித்ததாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் 17ஆம் தேதி ஜெய்குமாரின் மனைவியும் மகனும் பாண்டிச்சேரிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். 

18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஜெய்க்குமார் வீட்டில் இருந்து புகைவந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அப்போது மகளும் அனைவரையும் கூச்சல் போட்டு அழைத்துள்ளார். உள்ளெ சென்ற போலீஸார் அங்கே பெட்ரூமில் உள்ள பாத்ரூமில் ஜெய்க்குமார் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்தின விசாரணை பல திடுக்கிடும் தகவல் வெளியானது. ஜெய்க்குமாரை தனது காதலனுடன் கொலை செய்ததாக மகள் ஒப்புக்கொண்டார். 

இதுகுறித்து அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தந்தை தன்னை ப்ரவீனுடன் பேசக்கூடாது என்று கூறியதால் அவரை கொலை செய்யத் திட்டமிட்டு, தனது தாய் வெளியே சென்றதும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். பின் தந்தை பயக்கம் அடைந்ததை உறுதி செய்துகொண்டு, தனது காதலனை அழைத்துள்ளார். இருவரும் ஜெய்குமாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, பெட்ரோல் வாங்கிவந்து, அவரை பாத்ரூமில் தள்ளி பெட்ரோல் உற்றி எரித்துள்ளனர். 

போலீசார் பெட்ரூமில் படிந்திருந்த ரத்தக்கறை மற்றும் மகள் காலில் இருந்த தீக்காயம் ஆகியவற்றை வைத்து மகளுக்கு இதில் தொடர்பு உள்ளதை உறுதி செய்தபின் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அவரும் காதலனும் வீட்டில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு ஜெய்க்குமார் இறந்துவிட்டதாக கூறிவிடலாம் என்று ப்ளான் செய்துள்ளனர். தற்போது ப்ரவீன் விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட, அந்த 15 வயது மகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பெற்ற மகளே இப்படி தந்தையைக் எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...