பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையான தபு, 90-களில் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டாப் நடிகையாக திகழ்ந்தவர்; அதுமட்டுமல்ல 2 முறை தேசிய விருதும், பல முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளும் பெற்றவர்.

அமிதாப் பச்சன், சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட ஹிந்தி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் தபு.
சினிமா குடும்பத்தில் பிறந்த தபுவின் தங்கை பரஹா நாஸும் நடிகை தான்.
பிரபல ஹிந்தி குணச்சித்திர நடிகை ஷபானா ஆஸ்மி, தபுவின் சொந்த அத்தை என்பது உங்களுக்கு தெரியுமா?!
தபு சைவம் மட்டுமே சாப்பிடுவார். மேலும், இவர் ஒரு சுற்றுலாப்பிரியரும் கூட.
தமிழில் ’இருவர்’, 'காதல் தேசம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'சிநேகிதியே' உள்ளிட்ட படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திவர் தபு.
தமிழில் தபு நடித்த கடைசி படம், 2013-ல் விக்ரம் நடிப்பில் வெளியான ’டேவிட்’.